Wednesday, April 11, 2012

கடைசி அவதாரமான

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான  கல்கிஇறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.
இதை நான் சொல்லவில்லைசமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின்இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால்,அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடுஅந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.
ஆனால்கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம்வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியதுதலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும்ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.
பண்டிட் வைத் ப்ரகாஷபன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தைஇதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும்முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்துபலமான ஆதாரங்களினால்இப்புத்தகத்தின் தகவல்முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.
இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள்குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம்மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால்ஹிந்துக்கள்இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல்ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்புஇவ்வுலகில் உதித்துஇறைத்தூதை எத்தி வைத்துவாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்கபண்டிட்தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.
வேதங்கள்கல்கி அவதாரம் தான்பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இதுகடைசி தூதர்முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.
ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படிகல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான்ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.
ஹிந்து புனித நூல்களில்கல்கி அவதாரத்தின் தந்தையை,விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால்,இறைவன்அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடுபகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.
ஆகவிஷ்னு பகத் என்பதுஅல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில்அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்குசாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆகஇறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பதுஉறுதிப்படுகிறது.

4.
அதோடுகல்கி அவதாரம்ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும்வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக,இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.
கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும்மிக உயரிய,மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால்முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.
கல்கி அவதாரத்துக்குஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக,மக்காவிலேயேஅல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.
மேலும்கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும்அதன் மூலம் அவர்,இவ்வுலகத்தையும்ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானதுஇதைத்தானே சொல்கிறது?

8.
அதோடுகல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும்இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்குபத்ரு போர்க்களத்தில்இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.
மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவதுகல்கி அவதாரம்குதிரையேற்றத்திலும்,அம்பெய்துவதிலும்வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில்பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பதுஅதி முக்கியமானகவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவதுகுதிரைவாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டதுதற்போதுநவீன ஆயுதங்களானதுப்பாக்கிகள்பீரங்கிகள்ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால்வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில்வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பதுபுனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.
பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.
தமிழ் மொழி பெயர்ப்பு: சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)

திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.

92123 57123 என்ற எண்ணுக்கு vahan TN49L8426 வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.

இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.

மோட்டார் விகடன் (http://www.facebook.com/MotorVikatan)

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்


இது, கடந்த சில மாதங்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.

----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது. 

இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள். 

பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.  

ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.  
ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை. 

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.  

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை"என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர்,"பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்"

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார். 
இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."
----------------------------

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.

குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
  • Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள். 
  • Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு. 
  • One Reason  - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லா ம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு. 
  • The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம். 

மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன. 

இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப் பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.

இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104 

இறைவன் நம் சமூகத்திற்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இயக்கங்களையும், அறிஞர்களையும் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note: 
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. முழுமையாக படிக்க கீழே கொடுக்கப்படுள்ள சுட்டியை சுட்டவும்.
 
My sincere thanks to:
1. "The Independent" daily.

References:
1. The Islamification of Britain: record numbers embrace Muslim faith - Jerome Taylor and Sarah Morrison, The Independent, dated 4th January 2011. link
2. Islamic Education and Research Academy. link  
3. Federation of Student Islamic Societies. link
தகவல்:http://naharvu.blogspot.in

குஜராத் முதல் மாநிலமா? புள்ளி விவரம் கூறும் உண்மை

ரேந்திரமோடியையும், அவரது தலைமையிலான அரசையும் ஒவ்வொரு பிரச்சினையிலும் வெளுத்து வாங்கி வருகிறன நீதிமன்றங்கள். நீதிமன்றங்களின் கண்டனங்களுக்கு கூடுதலாக இலக்கானவர் என்ற பரிசையே மோடிக்கு வழங்கலாம். ஆனாலும் மோடியின் ஆட்சியில் குஜராத் இந்தியாவின் முதன் மாநிலமாக திகழ்கிறது என்ற வாதம் சங்பரிவார சக்திகளால் முன் வைக்கப்படுகிறது. உணமியில் குஜராத் இந்தியாவில் ஒரே ஒரு விசயத்தில் முதலிடத்தில் இருப்பது உண்மைதான். அது எதுவென்றால், முஸ்லிம் மக்களை கருவறுக்கும் விசயமாகும். மற்றபடி மாநிலத்தின் வளர்ச்சியில் முன்னேற்றம் என்ற இவர்களின் இந்த வாதம் சரியா? மோடியின் திறமையால் குஜராத் முதல் மாநிலமாக திகழ்கிறதா? இதன் உண்மை நிலை என்ன என்பதை 'விடுதலை' நாளேடு புள்ளிவிவரத்துடன் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகளை நன்றியுடன் கீழே தருகிறோம்.

''மோடி அளவுக்கு சிறுபான்மை மக்களை வேட்டையாடுபவர்கள் இந்துத்துவ வெறியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில்  எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார்களே! கோவில்களில் ஆட்டுக் கிடாவைப் பலியிடுவது போல, கோழிகளின் கழுத்தைத் திருகிப் போடுவதைப்போல அல்லவா இஸ்லாமிய மக்களை ஆயிரக்கணக்கில் குரூரமான முறையில் கொன்று குவித்து அவர்களின் ரத்த ஆற்றில் நீந்தித் திளைத்தார்.

இப்படி ஓர் ஆள் கிடைத்தால்  பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்புதானே! அதனால்தான் மோடிக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார் சோ. துக்ளக் இதழில் குஜராத் மாநிலத்தில் பாலாறும், தேனாறும் பாய்கிறது என்று தொடர் கட்டுரைகளை எழுதிடச் செய்துள்ளார்.
குஜராத் போல நல்லாட்சி இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டுமா? அப்படியானால் நரேந்திரமோடியை இந்தியாவின் பிரதமராக்குங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்து வருகிறார். அப்படிப் பார்த்தாலும் அவர் கூறுவதாவது உண்மையா என்றால் அதுதான் இல்லை; எல்லாம் வெத்து  வேட்டு இட்டுக் கட்டிச் சொல்லப்படும் தகவல்கள்.
  • மனிதவள அடிப்படையில் இந்தியாவில் குஜராத்துக்கு உரிய இடம் - 20. 
  • வருமான அடிப்படையில் ஆறாவது இடம், 
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4ஆவது இடம், 
  • தனிநபர் வருமான அடிப்படையில் 9ஆவது இடம். 
  • பாலின விகித அடிப்படையில் 22 ஆவது இடம்,
  • கல்வியில் 14ஆவது இடம், 
  • மின் உபயோகத்தில் 10ஆம் இடம், 
  • தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுச் செய்திகளை அறிவோர் விகித அடிப்படையில் ஆண்கள் 12ஆம் இடம்,பெண்கள் 15ஆம் இடம், 
  • சரியான உடல் எடை விகிதத்தில் ஆண்கள் 11ஆம் இடம், பெண்கள் 12ஆம் இடம்.
  • தொலைக்காட்சியுடையோர் கணக்கிட்டால் 11ஆம் இடத்திம். 
  • மொத்த சாலைகளின் நீளத்தில் 10ஆம் இடம். 
  • சாலைகளில் அடர்த்தி  விசயத்தில் 21ஆவது இடம். 
  • மின் நிலைய நிர்மாண இடத்தில் 2ஆவது இடம்.
  •  மருத்துவமனையில் பிரசவம் நடக்கும் இடத்தில், 8ஆவது இடம். 
  • சராசரி வாழ்நாளில் ஆயுள் அளவில் 10ஆம் இடம்.
  • ஏராளமான சலுகைகளை அளித்து அந்நிய முதலீட்டைக் கவருவதில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்த மாநிலம் உற்பத்தியில் நான்காம்  இடம்.
இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மாநிலம்தான், இந்தியாவில் நல்லாட்சி நடக்கும் மாநிலமாம், மக்கள் வளமாக வாழும் மாநிலமாம். சோ கூட்டம் புளுகுகிறது -  மயக்க மிட்டாய்க் கொடுக்கிறது - பொது மக்களே ஏமாறாதீர்! கவனம்! கவனம்!!

இதற்கு இப்போதே முடிவு கட்டியாக வேண்டும்


மௌலவி அ. முஹம்மது கான் பாகவி


காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.

தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து... இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்... சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?

அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா?

அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவனுக்கு இந்த அவலம் தேவைதானா?

அல்லது இருவரும் இணைந்து சில ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்து, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுவிட்டு, பண நெருக்கடியோ மன நெருக்கடியோ ஏற்படும்போது, உன்னை நம்பி நான் வந்தேனே! என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நொந்துகொண்டு, தற்கொலையில் அல்லது மணமுறிவில் போய் நிற்குமே! இந்தக் காதல் இருவருக்கும் தேவைதானா?

ஆய்வின் முடிவு

இதை நாம் வாதத்திற்காகவோ வருத்தத்திற்காகவோ குறிப்பிடவில்லை. ஆய்வின் முடிவு இதுதான்:

ஹெலன் ஃபிஷர் என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், காதலர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தாராம்! 1. காம்ம் 2. உணர்வுபூர்வமான காதல் 3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் ஆகிய மூன்று வகையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

இவற்றில் காமம்தான் முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடம் உணர்வுபூர்வமான காதலுக்கு. மிகமிகக் குறைவாகவே நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் மூளையில் தென்பட்டதாம்!

இப்போது சொல்லுங்கள்! காதல் என்ற பெயரில் காமம்தானே விளையாடுகிறது! இதில் போலி எது? அசல் எது என்பதை அவனோ அவளோ எப்படிப் பகுத்தறிய முடியும்?

அண்ணன் – தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இளம்பெண்ணின் தாயார் தன் கரத்தால் அன்போடு சமைத்துப்போட்டதையெல்லாம் பல நாட்கள் ருசித்துவந்த ஐந்து மாணவர்கள், ஒருநாள் அவளுக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, இரவு முழுக்க அந்த ஐந்து நாய்களும் கடித்துக் குதறிய சம்பவம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தையே உலுக்கி எடுத்ததே!அவர்களில் சிவானந்தம் (19) என்பவன் பல ஆண்டுகளாக அவளைக் காதலித்தவனாம்!

இது காதலா? காம வெறியா? அதையும் தாண்டி, மற்றவனுக்குக் கூட்டிக்கொடுக்கும் ஈனத்தனமில்லையா இது?

அது மட்டுல்ல; மணவிலக்கு (டைவர்ஸ்) கோருவோரில் கணிசமான எண்ணிக்கையினர் காதல் திருமணம் செய்துகொண்டவர்களே என்பதும் ஆய்வின் முடிவாகும்.

எதையோ எதிர்பார்த்து கண்ணும் கண்ணும் உரையாடுகின்றன. எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்ட பிறகு, அல்லது ஏமாற்றம் ஏற்பட்ட பிறகு அதே கண்கள் உரையாடாவிட்டாலும், சாதாரணமாகப் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. மறுக்க முடியுமா?

கலாசாரச் சீரழிவு

கற்பும் காசும் பறிபோவதோடு காதல் போதை தெளிகிறதா என்றால், மார்க்கம் தாண்டிப்போய் ஓர் இறைமறுப்பாளனின் வாரிசை சமுதாயப் பெண்ணொருத்தி சுமக்கின்ற தாங்க முடியாத கொடுமையும் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது! அல்லது ஒரு முஸ்லிமின் வாரிசு இறைமறுப்பாளியின் வயிற்றில் உருவாகி, அவள் மடியில் தவழ்கிறதே! என்ன சொல்ல?

பள்ளிவாசலுக்கு வந்திருப்பானோ வரவில்லையோ! ஓரிறைக் கோட்பாட்டை இதுவரை கைவிட்டிருக்கமாட்டான் அல்லவா? இன்று அவன் சர்ச்சில் அல்லது கோயிலில் காதலியுடன் வழிபாடு செய்கிறான். அல்லது நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன் என்று சமத்துவம் பேசிக்கொண்டு, குழந்தைகளை நரகத்தில் தள்ளுகின்றான்.

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள். 
(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)
இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களேகையில் விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களேங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும் மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?

எழுதிவிட்டேன் பலதடவை

முஸ்லிம் இளைஞர்களும் இளம்பெண்களும் தமிழ்நாட்டில் காதலின் பெயரால் அழிந்துகொண்டிருப்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் நானும் பலமுறை எழுதிவிட்டேன். கடந்த 2011 ஜூலை 13ல் வெளியான தமிழக அரசின் கெஜட்டில் உள்ளபடி மதம் மாறிய 106 பேரில் 9 பேர் முஸ்லிம்கள் என்ற உண்மையை வெளியுலகுக்குக் கொண்டுவந்து, சமுதாய ஏடுகள் அனைத்திற்கும் கட்டுரை அனுப்பினேன். பெரும்பாலான இதழ்களில் வெளிவந்தது.

நமது வலைத்தளத்திலும் வெளியிட்டோம். பல அன்பர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவும் செய்தார்கள். தமிழகத்தில் சென்னை, திருச்சி போன்ற இடங்களில் இக்கொடுமையைத் தடுத்துநிறுத்த ஜமாஅத் நிர்வாகிகளும் உலமாக்களும் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டங்களும் நடந்தன.

சென்னை மஸ்ஜித் மஃமூர் பள்ளிவாசலில் 17.01.2012 அன்று நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதன் ஒலிப்பதிவு நமது முகநூல் பக்கத்தில் வெளியாகியும் உள்ளது. m(அதன் இணைப்புகளை க்ளிக் செய்து செவியுறலாம்) https://www.facebook.com/khanbaqavi?sk=wall http://f.cl.ly/items/1Z2A3m0K1Y432z3M3C0d/Khan%20Baqavi%20Speech%20@%20mamoor%2017.01.2012.mp3 இன்னும் பல கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக வடிவில் சென்னை ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டுள்ளது. சமுதாயத்தில் ஓர் அசைவு தென்படுகிறது. அல்ஹம்து லில்லாஹ்...

ஆனாலும், வேகம் போதாது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய ஒரு ஆபத்துக்கு, நத்தை வேகத்திலான முயற்சிகள் எப்படி ஈடு கொடுக்கும்? மதம்விட்டு மதம்மாறி காதல் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் முஸ்லிம் பெற்றோர்களே சம்மதம் தெரிவிக்கும் அடுத்த கட்டத்திற்கு சமுதாயம் போய்விட்டதாகத் தெரிகிறது.

அண்மையில் சில திருமண அழைப்பிதழ்கள் பார்வைக்கு வந்தன. இரண்டிலும் மணமகன் முஸ்லிமல்லாதவன். மணமகள் முஸ்லிம் பெண். அவரவர் தத்தம் பெற்றோர் பெயர்களையும்அவ்வண்ணமே கோரும்’ இடத்தில் முஸ்லிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களையும் கூச்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர் இசைவின்றி இது நடக்குமா? சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?



மறுமை நாளின் அடையாளம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பயனுள்ள) கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படுவதும் மது (மலிவாக) அருந்தப்படுவதும் விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். (ஸஹீஹுல் புகாரீ – 80)
அண்மையில் ஒரு செய்தி படித்தேன்காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழ முடிகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமையின் விழுக்காடு 10.9 மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை 16.6 விழுக்காடு மட்டுமே.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை நிலங்களை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்கள் படையெடுத்துவிட்டனர். ஒரு சில முஸ்லிம்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. வெளிநாட்டு வாசல் ஒருநாள் அடைக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்காமல், நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்.

அயலகங்களில் ஆண்கள் பல மாதங்கள், சில வேளைகளில் பல ஆண்டுகள் தங்கிவிடும்போது உள்ளூரிலே பெண்கள் இயற்கையான உறவுகளுக்கு ஏங்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பால்காரன், கேபிள் டி.வி. ஆபரட்டர், பொருட்கள் விற்க வருபவன், வங்கி ஊழியன், உறவுக்காரன் எனப் பல வகையான ஆண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.
“ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)
நபியவர்களின் எச்சரிக்கை பல ஊர்களில் உண்மையாகிவருகிறது. அங்கெல்லாம் ஷைத்தானின் கொடி பறக்கிறது. அக்கொடியின் நிழலில் கற்பு பறிபோகிறது.
கண்ணின் விபசாரம் பார்வை; நாவின் விபசாரம் பேச்சு; மனமோ ஆசைப்படுகிறது;இச்சிக்கிறது. உறுப்பு அதை மெய்ப்பிக்கிறது; அல்லது (விலகி) பொய்யாக்கிவிடுகிறது. என்பதும் நபிமொழிதான் (ஸஹீஹுல் புகாரீ – 6243). பார்வைக்கும் பேச்சுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பது இப்போது தெரிகிறதா?
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடும் பெண்கள், தம் வீட்டு ஆண்கள் அனுப்பிவைக்கும் பணம் போதவில்லை என்று சொல்லி, கொடும் பாவத்தை ஒரு தொழிலாகவே செய்யும் துணிச்சல் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

தாயே மகளை அனுப்பிவைப்பதையும் மாமியாரே மருமகளை வண்டியில் ஏற்றிவிடுவதையும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. பிறகு தாய்மைக்குத்தான் என்ன அர்த்தம்? குடும்பத் தலைவி என்பதற்குத்தான் என்ன பொருள்?

தீக்குண்டத்தில் நிர்வாணமாக

நபி (ஸல்) அவர்கள், தாம் நரகத்தில் கண்ட காட்சிகளை விவரித்தார்கள்; அப்போது பின்வருமாறு கூறினார்கள்:

அடுப்பு போன்ற ஒரு பொந்து. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்த்து. அதற்குக் கீழ் தீ எரிந்துகொண்டிருந்தது. தீ அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாகயிருந்ததால் வெளியேற முடியவில்லை.)

தீ அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான், இவர்கள் யார்?” என்று கேட்டேன். வானவர்கள், இவர்கள்தான் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ – 1386)

அழகான பெண்கள் வசிக்கும் பகுதியில் வடநாட்டுக் கும்பல் கடைகளைத் திறப்பார்கள். அடகு கடை, நகைக் கடை, துணிக்கடை போன்ற வணிகத் தலங்களைத் திறந்து, மறைமுகமாக விபசாரத் தொழிலையும் மேற்கொள்கிறார்கள். நகை வாங்க வரும் பெண்களுக்கு வலியச்சென்று உதவுவதுபோல் உதவி செய்து வலையில் சிக்கவைத்து, இனி திரும்ப நினைத்தாலும் திரும்ப முடியாத நெருக்கடியில் தள்ளிவிடுவார்கள்.

புதுவகை நகைகள்மீதும் துணிகள்மீதும் பெண்களுக்கு இருக்கிற மோகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள். மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள். வெளியே சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்ற மிரட்டல் வேறு.

இவர்களுக்கு வகைவகையான புரோக்கர்கள்; சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என எல்லாரும் துணை; கூட்டணி. இந்தப் பாவத்திற்குத் துணைபோகின்றவர்களிலும் முன்னின்று ஏற்பாடு செய்கின்றவர்களிலும் கலிமா சொன்ன முக்கியப் புள்ளிகளும் இருப்பதுதான் வன்கொடுமை.

இது ஒரு பெரிய நெட்வொர்க் என்று சொல்லப்படுகிறது. திருமண வீடியோ, பள்ளி நிகழ்ச்சிகள் வீடியோதான் பெண்களுக்கு வலைவீச இவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இவ்வாறு சிக்கும் அழகான இளம்பெண்களை மாநிலம் தாண்டி விபசாரத்திற்கு அனுப்பிவைப்பதுடன், பாலியல் படங்கள் எடுக்கவும் போதைப் பொருள் கடத்தவும் இக்கயவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆக, பெண்கள் மார்க்கத்திற்கு வெளியே; ஆண்கள் விரக்தியின் விளிம்பில். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். எப்படி என்பதுதான் தெரியவில்லை. யோசித்து யோசித்து தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

இது பரசிக்கொண்டுவரும் பேராபத்து. அங்குதான்; இங்கு இல்லை என்றெல்லாம் பிரித்துப்பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் கவலையோடும் அச்சத்தோடும் இது குறித்து சிந்திக்க வேண்டும். தனிமையில் அழுது புலம்புவதில் புண்ணியமில்லை. எப்பாடுபட்டேனும் இந்தச் சமூக்க் கொடுமையை, பெண்ணினத் தீமையை தடுத்து நிறுத்தியாக வேண்டும்!

பிப்ரவரி 14ஆம் தேதி ‘காதலர் தினம்’ என்றொரு கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏறத்தாழ எல்லா நாடுகளும் சட்ட அனுமதி அளிக்கின்றன. இத்தகைய நரகச் சூழலில்தான் பண்பாடு மிக்க முஸ்லிம்களும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம்தான் நம் வீட்டுப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்திட வேண்டும்.

நம் வீட்டு ஆடுகள் வேலியைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்ட இன்றையச் சூழலில் வேலியே இல்லாவிட்டால் என்னவாகும் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ் என்றால் யாருங்க? (Dawah)


 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..
                 
                         "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!)

*************************************************************************************************************************************************
அல்லாஹ் என்றால் யாருங்க?



கேள்வி: அல்லான்னா யாருங்க! (சகோ. ஜெகதீஸ்வரன்)
பதில் :-அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்
·         நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும்அவனை வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
·         நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும்அவனுக்கு இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
·         நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும்அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
 
கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
·         சூரியன் வெளிச்சம் தருகிறது அந்த வெளிச்சத்தை நோக்கி பூமி உட்பட அனைத்து கோள்களும் நகர்கிறது இதன் மூலம் பகல்களும்இரவுகளும் ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
·         பூமி ஒரே சீராக சுழல்வதால் தட்ப வெப்ப சீதோஷ்ணத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டு குளிர்காலம்மழைக்காலம்வெயில்காலம்ஆகியன ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
·         நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களின் சுவாசக்குழாயில் முறையாக வந்தடைகிறது அதை கொடுப்பது யார் மனிதனா?
·         நிலப்பரப்பில் உள்ள ஈர்ப்பு சக்தியால் நாம் நடக்கிறோம்,அமர்கிறோம்ஓடுகிறோம் இந்த ஈர்ப்பு சக்தியை நிர்வகிப்பவன் யார் மனிதனா?
·         நிலத்தில் மனிதன் உழுகிறான் அவனுக்கு விதையை அறிமுகப்படுத்தியவன் யார் மனிதனா?
·         கடல் நீரை மழை நீராக்கி பருகுவதற்கும் நிலத்தை உழுவதற்கும் வானிலிருந்து கொட்டச் செய்பவன் யார் மனிதனா?
·         ஆகாயத்தில் பறக்கும் விமானத்திற்கு பாதையாக வானத்தை கொடுத்தவன் யார் மனிதனா?
·         குடும்ப உறவு கொள்ள மனிதர்களின் உடலில் விந்துத்துளிகளை செலுத்தியவன் யார் மனிதனா?
·         வயிற்றுப் பசியை தனிக்க மலம் சாப்பிடுவதில்லை மாறாக உணவு உட்கொள்கிறோம்தாகத்தை தனிக்க சிறுநீரை குடிப்பதில்லை மாறாக சுத்தமான நீரை பருகுகிறோம் மனிதனுக்கு இந்த பகுத்தறிவை கொடுத்தவன் யாரோ அவனே இறைவன்!
இறைவன் இல்லை என்று சொல்பவன் நாத்திகன் இவன் மாபெரும் பொய்யன் இவனுடைய கழுத்தில் கத்தியை வைத்தால் கடவுளே என்பான் காப்பாற்றப்பட்டவுடன் கடவுள் யார் என்பான்!
அல்லாஹ்வுக்கு பிறப்பு உள்ளதா?
ஒவ்வொரு மனிதனும் படைத்த இறைவனை தன்னுடைய பலவீனமான ஸ்தானத்தில் வைத்துத்தான் பார்க்கிறான் படைத்த இறைவனை இறைவன் என்ற ஸ்தானத்தில் வைத்து பார்ப் பதில்லை.
சிந்தித்துப்பாருங்கள்! உங்கள் தாயின் வயிற்றில் நீங்கள் 3 மாத கருவாக இருந்தீர்கள் அந்த குறிப்பிட்ட 3 மாதங்களுக்கு முன்பு நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதை கூற முடியுமா?
ஒரு மனிதன் தன் தாயின் வயிற்றில் 3 மாத கருவாக இருப்பதற்கு முன் அற்பத்திலும் அற்பமான ஒரு ஆட்டின் புளுக்கையாக கூடஇருந்திருக்கவில்லை அப்படிப்பட்ட மனிதனை இறைவன் கருவாக உருவாக்கிஅதனுள் உயிர் கொடுத்துபெயர் கொடுத்துபெற்றோரை கொடுத்து கல்வி அறிவைக் கொடுத்து உலகில் வாழவைத்து மனிதனாக்கி சிந்திக்க மூளையை கொடுத்தால் இவன் படைத்த இறைவனின் பிறப்பை பற்றி சிந்தித்து கேள்வி எழுப்புகிறான். இந்த மனிதன் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருப்பதை காட்டிலும் நன்றிகெட்டவனாகத்தான் வாழ்ந்து மடிகிறான்!
இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 22:66)
அல்லாஹ்வுக்கு மனைவி, பிள்ளைகள் உள்ளனரா?
ஒரு மனிதனுக்கு மனைவியும்பிள்ளைகளும் இருப்பதுஅவனுடைய வம்சத்தை பல்கிப் பெருகுவதற்காகவே தவிர வேறு எதற்கும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் குடும்ப வாழ்வில் ஒன்று சேருவதன் மூலமாக தந்தைமகன்பேரன்கொள்ளுப்பேரன் என்று வம்சம் அபிவிருத்தியாகும் அதே நேரம் குடும்பத்தில் மரணங்கள் சம்பவிக்கும் காரணம் மனிதன் மரணிக்க பிறந்தவன்! இதோ மனித இனமும் அவனது குடும்ப அபிவிருத்தி பற்றிய விழிப்புணர்வு படம்.
மனிதனுக்கு அவனுடைய குடும்பம் சோதனைக் களமாக இருக்கிறது அவன் தன் தாயைதந்தையைசகோதர உறவைமனைவியை,மக்களை என்று அனைவரையும் முறையாக கவனிக்கிறானா?இவர்களுக்காக உழைக்கிறானாதிருடுகிறானாஅல்லது இவன்குடும்பத்தை மறந்து தவறான பாதையில் செல்கிறானா?என்பதுதான் அந்த சோதனை! இந்த சோதனைகளை கொடுப்பவன் இறைவன் எனவே இறைவனை எவனும் சோதிக்க இயலாது மேலும் அவனுக்கு குடும்பமும் கிடையாது!
"அல்லாஹ் ஒருவன்" என (முஹம்மத்) நீர் கூறுவீராக!. அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும் இல்லை. மேலும் அவனுக்கு நிகராக ஒருவரும் இல்லை. (அல்குர்ஆன்- 112)
அல்லாஹ் ஒருவன்அவனுக்கு இணை துணை கிடையாது!
இஸ்லாம் போதிக்கும் கடவுள் கொள்கை உலகில் உள்ள மற்றமதங்களின் இறைக் கொள்கைகளை விட சற்று வேறுபட்டு நிற்கிறது. காரணம் இஸ்லாம் ஓரிரைக் கொள்கையை போதிக்கிறது மற்ற மதங்கள் அனைத்தும் பல கடவுள் கொள்கையை போதிக்கிறது!
ஒரு இறைவன் என்ற ஓரிரைக் கொள்கைதான் உண்மை என்பதற்கு கீழ்கண்ட காரணங்கள் தெளிவாக விளக்கும்
நீதி செலுத்த ஒரு இறைவன்தான் இருக்க வேண்டும்!
ஒருவனுக்கு அநீதி இழைக்கப்படும் போது அநீதி இழைக்கப் பட்டவனுக்கு உரிய நீதியை முறையாக செலுத்த வேண்டும் உதாரணமாக மூன்று கடவுள்கள் இருந்தால்
படைக்கும் கடவுள்
இந்த மனிதனை நான் படைத்தேன் இவன் பாவியாகிவிட்டான் இவன்என்னை வழிபட்டான் எனவே படைத்த நானே இவனை மன்னிக்கிறேன் என்று கூறும்
கண்காணிக்கும் கடவுள்
இந்த பாவியை நான் கண்காணித்து வந்தேன் என் கண்ணால் கண்ட நான் இவனை எவ்வாறு மன்னிக்க இயலும் என்று கூறும்
அழிக்கும் கடவுள்
படைக்கும் கடவுள் மனிதனை படைத்துவிட்டதுகண்காணிக்கும்கடவுள் பாவியை கண்காணித்துவிட்டது எனவே அழிக்கும் கடவுளாகிய நான்தான் இவனை தண்டிப்பதாமன்னிப்பதா என்று தீர்மானிக்கும் உரிமை படைத்தவன் என்று கூறும்
ஒன்றுக்கு மேமற்பட்ட அல்லது மூன்று கடவுள்களாகவோஇருந்தால் தங்களுக்குள் பிரச்சினையை தீர்க்க முடியாமல் வெவ்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டு தங்களுக்குள் உட்பூசல்கள் ஏற்படுத்திக்கொள்ளும் ஆனால் ஓரிரைக் கொள்கையை போதிக்கும் இஸ்லாம் அல்லாஹ் ஒருவனை மட்டும் கடவுளாக முன் நிறுத்துகிறது அந்த ஒரு இறைவனாகிய அல்லாஹ் தான் நாடினால் தனக்கு இணை கற்பித்த பாவத்தை தவிர மற்றபாவங்களை செய்த பாவியைக் கூட மன்னிப்பதாகவும் தான் நாடினால் தனக்கு இணை கற்பிக்காமல் தான் வகுத்த சட்டத்தை மீறிய நல்ல அடியானைக் கூட தண்டிப்பதாகவும் கூறுகிறது.
‘தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.’ (அல்குர்ஆன் 4:48)
ஒரு இறைவனாக இருந்தால் எதற்கும் அடிமையாக முடியாது!
பல கடவுள்கள் இருந்தால் அத்தனை கடவுள்களும் கருத்துவேறுபாடுகள் தோன்றும் இறுதியாக ஏதாவது ஒரு கருத்தின் பக்கம் தலைசாய்க்க ஒரு வஸ்துவிடம் அனைத்து கடவுள்களும் கை கட்டி நின்று கட்டுப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இப்படிப்பட்ட நிலையில் அந்த ஒரு வஸ்து அனைத்து கடவுள்களுக்கும் அறிவுரை கூறி அவர்களை கட்டுப்படுத்தி விட்டால் அந்த வஸ்து கடவுளாகவும் அந்த வஸ்துவுக்கு முன் குழுமி நின்று கைகட்டி நிற்பவை அனைத்தும் அந்த வஸ்துவின் அடிமையாகத்தான்இருக்கும் எனவே கட்டுப்படும் கடவுள்கள் என்று எதுவும் கிடையாது.
அல்லாஹ் ஒருவன்அவன் தனித்தவன் அவன் கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவன் தவிர தான் படைத்த வஸ்துக்களிடம் கட்டுப்பட வேண்டிய இழிவான சூழ்நிலை அவனுக்கு இல்லை எனவேதான் அல்லாஹ் உங்கள் இறைவனாக இருக்கிறான் இந்த இறைவனுக்கு நீங்கள் அடிமையாக இருக்க சந்தோஷப்பட வேண்டும்!
"அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப்படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (அல்குர்ஆன்: 17:111)
ஒரு இறைவனால் அனைத்தையும் நிர்வகிக்க இயலும்!
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான இரத்த அணுக்கள்காணப்படுகின்றனநூற்றுக்கணக்கான உறுப்புகள் இயங்குகின்றன அத்தனை உறுப்புக்களையும்கோடானு கோடி இரத்த நாளங்கள் மற்றும் இரத்த அணுக்களையும் நிர்வகிப்பதற்கு உங்கள் உடம்பில் உங்கள் உயிரை அல்லாஹ் படைத்துள்ளான் நீங்கள் உங்களை அறியாமலேயே உங்கள் உடலை நிர்வகிக்கிறீர்கள் இப்படிப்பட்ட உங்களுக்கே இப்படியொரு ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கும் போது கடவுளாகிய அல்லாஹ்வுக்கு அண்டசரா சரங்களையும் ஒருவனாக இருந்து நிர்வகிக்க ஆற்றல் இருக்காதாஎன்ன!
உங்கள் உடம்பில் உங்களுடைய ஒரு உயிர் இருப்பதால்தான் உங்கள் உடம்பிற்கான கட்டளைகளை உங்களால் சீராக செலுத்த முடிகிறது அதுவே இரண்டு ஆதம்மாக்கள் உங்கள் உடம்பில் இருந்தால் கட்டளைகளில் முரண்பாடு ஏற்பட்டு மூளை பலவீன மடைந்துவிடும்! இதே போலத்தான் ஒரு இறைவன் (அதாவது அல்லாஹ்) இந்த அண்டசராசரங்களுக்குத் தேவையான கட்டளைகளை பிரப்பித்து நிர்வகித்து வருகிறான் மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் கட்டளைகள் ஒழுங்காக சென்று சேராது! அல்லாஹ் அவன் மிக்க அறிவாளியாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ளான் இதைப் பற்றி அருள்மறைகுர்ஆன் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறது!
"உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்" என்றும் கூறினார்.(அல்குர்ஆன் 20:98)
உங்கள் இறைவன் அல்லாஹ் குற்றம் இல்லாதவன்!
பாவம் செய்வது மனித இயல்பு பாவமற்றவன் இறைவன்எனவேதான் கடவுள் என்று எண்ணி ஒரு வஸ்துவுக்கு கைகால்கள் கொடுத்து நெற்றியில் கண்ணை பதித்து மனித ரூபத்தில் ஒரு சாரார் ரசித்தனர் இறுதியல் அந்த வணங்கப்படும் வஸ்துவை நோக்கி நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று கூறி தங்கள் கடவுள் கூட பாவம் செய்யும் என்ற கண்ணோட்டத்தில் கண்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட இழிவு அல்லாஹ்வுக்கு கிடையாது அவன் குற்றம் குறையற்றவன்.
இரண்டு கடவுள்கள் இருந்தால்தானே நம்மை போன்று குற்றம் குறை கண்டுபிடித்து சண்டை போடவோ அல்லது பொய் சொல்லவோ முடியும் ஆனால் படைத்த இறைவன் ஒருவனாக இருக்கும்போது குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை அந்த ஓரிரைவன் எதை செய்தாலும் நிறையாகவே காணப்படும்!
உங்கள் இறைவன் அல்லாஹ் குறை இல்லாதவன்!
இரண்டு கடவுள்கள் இருந்தால்தான் இந்த கடவுளுக்கு இந்த குறை உள்ளது அந்த கடவுளுக்கு அந்த நிறை உள்ளது என்று கூறமுடியும் மாறாக ஒரே கடவுள் இருந்தால் அதனிடம் எந்த குறையும் தென்படாது அதனிடம் உள்ள அனைத்தும் நிறைவாகத்தான் இருக்கும்! எனவேதான் அல்லாஹ் குறையில்லா தவனாக இருக்கிறான் காரணம் அவன் தனித்தவனாக இணை துணையில்லாதவனாக இருப்பதே அவனுடைய சிறப்பு!
உங்கள் இறைவன் அல்லாஹ் அளவற்ற அருளாளன்
·         ஒன்றுமில்லாமல் இருந்த உங்களை கருவாக ஆக்கினான்
·         கருவுக்குள் உயிரை ஊதிஉடலை கொடுத்தான்
·         உடலுக்குள் உறுப்புகளை கொடுத்தான்
·         உறுப்புகளுக்கு கட்டளை செலுத்த மூளையை படைத்தான்
·         மூளைக்கு சிந்திக்கும் ஆற்றல் கொடுததான்
·         பசி எடுக்கும் போது குழந்தையிடம் அழுகை கொடுத்ததான்
·         அழுத குழந்தைக்கு தாய்ப்பால் மற்றும உணவு கொடுத்தான்
·         உணவுக்காக உலகை கொடுத்தான்
·         உலகில் நிலம்நீர்காற்றுமழைவெயில்குளிர்உஷ்ணம் என்று அனைத்தையும் கொடுத்தான்
·         உடல் சுகத்தை தணிக்க மனைவியை கொடுத்தான்
·         வயோதிக பருவத்தில் பெற்ற மக்களை போர்வை யாக்கினான்
·         மரணித்தபின் உங்கள் உடலை புதைக்க மண்ணை கொடுத்தான்.
இத்தனையும் கொடுத்த இறைவன்
·         நாம் நுகரும் காற்றிற்கு உங்களிடம் விலை பேசவில்லை,
·         பருகும் நீருக்கு கட்டணம் நிர்ணயிக்கவில்லை
·         வசிக்கும் நிலத்திற்கும் பேரம் பேசவில்லை
ஆனால் மனிதனாகிய இவன் காற்றை விற்பனை செய்கிறான்நீரை விற்பனை செய்கிறான் நிலத்தை மோசடி செய்து விற்கிறான் இவன் மனிதன் இறைவனை உணராதவன்! இவன் இறைவனது அருளை உணர்ந்துவிட்டால் பாவத்தை கைகழுவ நடிவிடுவான்அல்லாஹ்வுக்கு அடிமையாகிவிடுவான்!
அல்லாஹ் நம்மை சோதிப்பான் ஆனால் உதவுவான் (அவன் மாபெரும் கருணையாளன்)
அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுப்பான் அந்த குறைபாடுகளை பார்க்கும் நாம் ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறான்!
·         கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித் தருகிறான்! இதை விட சிறந்த உதவியாக கண்பார்வை யற்றவர்கள் கண்களின் விபச்சாரத்திலிருந்து பாதுகாப்பு பெற வைக்கிறான்! மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே!
·         காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கும்! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல் இருப்பதானல் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுக்கு எதிராக அவர்களதுசெவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
·         வாய்பேச முடியாத ஊமைகளால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்டவார்த்தைகளையும் பேச முடியாத காரணத்தினால் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களின் வாய்க்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
·         பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் ஏற்பட்டு பைத்தியமாக இருப்பார்கள்அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்குவருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே!  மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்புகிடைத்துவிடும்!  மேலும் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா!
அல்லாஹ்வுக்கு உள்ள பண்புகளும்தன்மைகளும்!
அல்லாஹ் என்பவன் அனைத்து படைப்பினங்களின் அரசனாகஇருக்கிறான் மேலும் படைத்தல்காத்தல்நிர்வகித்தல்அழித்தல் ஆகிய அனைத்து பண்புகளையும் அல்லாஹ் பெற்றுள்ளான். எந்த பொருளையும் முன்மாதிரியின்றி படைக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு உள்ளது மேலும் (குன்) ஆகுக என்று கூறினால் போதும் தான் நாடியவாறு அந்த பொருள் ஆகிவிடும். இதைப்பற்றி அருள்மறை குர்ஆன் பின்வருமாறு விவரிக்கிறது!
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் 'குன்' - ஆகுக - என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன்2:117)
அல்லாஹ்வை நம்புங்கள்
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்' என்று கூறினீர்கள் அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. (அல்குர்ஆன் 2:55)
விக்ரஹ ஆராதனையை தவிர்த்திடுங்கள்
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக் கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், "மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித் தருவீர்களாக!" என்று வேண்டினர்; "நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்" என்று மூஸா (அவர்களிடம்) கூறினார். (அல்குர்ஆன்: 7:138)
உலக மக்கள் அனைவரும் பொதுவான விஷயத்துக்கு வாருங்கள்
(நபியே! அவர்களிடம்) ”வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ”நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன்3:64)
குறிப்பு  :- பல்வேறு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளும் கருத்துக்களும் இந்த கட்டுரை வரைய பேருதவியாக இருந்தன! நம் அனைவருக்கும் அல்லாஹ் கல்வி ஞானத்தை வழங்கி நேர்வழிகாட்டி நல்லருள்புரிந்து!
நம் அனைவருக்கும் கல்வி ஞானத்தை வழங்கிவன் அல்லாஹ்தான் எனவே புகழனைத்தும் அவனுக்கே உரியது நாம் அவனுடைய அடிமைகள்தான்!
அல்ஹம்துலில்லாஹ்