Tuesday, September 25, 2012

முஹம்மது (ஸல்): விமர்சனங்களை வென்றவர்


கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்தமுஹம்மது (ஸல்அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனிதவரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டதுஇந்த உலகில்மனிதராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்கமுடியாதது.
 
சமயம்சமூகம்அரசியல்பொருளாதாரம்கலாச்சாரம்வரலாறுஅறிவியல்,மொழிதத்துவம்இலக்கணம்இலக்கியம்வாழ்வியல்உள்ளிட்ட அனைத்துதுறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறதுஇன்றும்நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாகஇடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கானஅவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும்மேற்கோள் காட்டப்படுபடுகின்றனசட்டம்நீதிநிர்வாகம் மற்றும்பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிற துறைகளாகும்அந்தப் பாலைவனச்செல்வர் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை.
 
மூன்றாம் உலகம் யுத்தம் ஒன்று வருமென்றால் அதற்கு தண்ணீர் தான்காரணமாக இருக்கப் போகிறது என  நா மன்றம் எச்சரித்துள்ளதுநீர் பங்கீடுமற்றும் நீர்ப்பாசனம் குறித்து முஹம்மது நபியின் வழிகாட்டுதல்கள் ஏற்றுக்கொள்ளப் படுமானால் அந்த அச்சத்திற்கு வழியே இருக்காது.
இந்த துறைகளிலெல்லாம் முஹம்மது (ஸ்ல்அறிவுரைகள்அல்லதுகருத்துக்களை கூறினார் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியாது.இத்துறைகள் அத்தனையும் அவர் பரிசோதனை முயற்சிகளை செய்து அதில்பெரும் வெற்றி கண்டார் என்று சொன்னால் அது கூட அவரை பற்றிய முழுஅறிமுகமாகிவிடாதுதான் உருக்கொடுத்த அத்தனை சிந்தனைகளையும்வழிவழியாக பின் பற்றி நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிச் சென்றார்,அந்த சமூகம் இன்றளவும் மட்டுமல்ல இனி உலகம் வாழும் காலம் வரையும்அவரது சிந்தனைகளை ஆலோசனைகளை உத்தரவுகளாக தலைமேற்கொண்டு செயல்படக் காத்திருக்கிறது.
 
அவர் மறைந்து இன்றும் அவரைப் பற்றியும் அவர் விட்டுச் சென்றதத்துவங்கள் நடைமுறைகள் குறித்தும் விவாதங்கள் தொடர்ந்துகொண்டிருப்பதை பத்ரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்சிப் படுத்திக்கொண்டிருக்கின்றன.
 
முஹம்மது (ஸல்அவர்களுக்கும் உலகம் கொண்டாடும் மற்றதலைவர்களுக்கும் இடையே மிக முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறது.இயேசுபுத்தர்ஆதி சங்கரர் விவேகானந்தர்காந்திபோன்ற பலரும் அனைத்துமக்களாலும் பாராட்டப்படுகிறவர்கள் என்பதில் சந்தேகமில்லைஆனால்இவர்கள் இன்றைய நவ நாகரீகத்தின் அழுத்த்தை தாண்டி இவர்களைபின்பற்றுகிற ஆட்கள் உண்டா என்பதும் அப்படியே இருந்தாலும் அவர்களின்சதவீதம் எத்தனை என்பதும் கேளிவிக்குரியதாகும்முஹம்மது நபி (ஸல்)பாராட்டப்படுகிறவராக மட்டுமில்லாது இன்றளவும் கண்டங்கள்அத்தனையிலும் பின்பற்றப்படுகிறார் என்பதை கூர்ந்து யோசிக்க வேண்டும்.
 
இராக் நகரின் ஒரு வீதியில் திடகாத்திரமான ஒரு இளைஞனை முதியவர்ஒருவர் நியாயமின்றி அடிக்கிறார்அவன் அதை தடுக்காமலும் திருப்பிதாக்காலும் நிற்கிறான்ஏனென்று கேட்டால் பெரியவர்களை மதிக்க்காதவர்என்னை சார்ந்தவர் அல்ல என்று முஹமது(ஸல்கூறியுள்ளார்நான் அந்தபழிக்கு ஆளாக விரும்பவில்லை என்கிறான்.
 
வாஷிங்டன் தெருக்களில் முகத்தை மறைத்த படி இளம் கல்லூரி மாணவிநடந்து கொண்டிருக்கிறாள்ஏன் இப்படி என்று கேட்டால்இதுமுஹம்மது(ஸல்நபியின் உத்தரவு என்கிறாள்.
 
ஆஸ்திரேலியாவின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சாக்லேட் வேண்டும்என்று சிறுவன் அடம் பிடிக்கிறான்அதை எடுத்துப் பார்த்த தந்தை இதுஹலால் அல்ல என்கிறார்சிறுவனின் அழுகை நின்றுவிடுகிறதுஎன்ன என்றுவிசாரித்தால் முஹம்மது (ஸல்என்று பெயர் சொல்லப்படுகிறது.
சோவியத் ஆக்ரமித்த பால்டிக் நாடுகளில் ஒன்றில் ஒரு இளைஞன்தொழுகைகான அழைப்பு பாங்கு வாசகங்களை கூறுகிறான்காவலர்கள்அடித்து உதைக்கிறார்கள்அவன் பாங்கை நிறுத்தவில்லைஅவனைசிறையிடைக்கிறார்கள் அங்கும் அவன் பாங்கு சொல்வதை நிறுத்தவில்லை.சொல்லனா தொல்லகளுக்குப் பிறகும் அவன் பாங்கு சொல்கிறான்கிருக்கன்என்று கூறி அவனை விடுதலை செய்கிறார்கள்எதற்காக இப்படி என்றுகேட்டால் முஹம்மது (ஸல்கற்றுக் கொடுத்த அற்புதமல்லவா அது என்றுஅவன் பதிலளிக்கிறான்.
 
காஷ்மீரின் பனிப்பொழிவுகளின் அடர்த்திக்கு இடையேயும் மதுவின்றிவாழும் ஒரு சமுதாயம்வெட்கத்தை விலை பேசி விற்று விட்டடென்மார்க்கிய நிர்வாணப் பிரதேசத்திலும் வரன்முறைக்கு உட்பட்டு வாழும்ஒரு சமுதாயம்பாரிஸ் நகரின் வீதிகளில் பர்தாக்களுக்களோடு உலாவருகிறஒரு சமுதாயம்இன்றைய வால்ஸ்ட்ரீட்ளின் சாம்ராஜயத்தில் வட்டிக்கும்முறையற்ற வர்த்தகங்களும் எதிராக எப்போதும் கொடிபிடித்துக்கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் அமரிக்க விமானங்களில் இன்னும்தாடிகளுடன் பயணம் செய்கிற ஒரு சமுதாயம்நேட்டோ நாடுகளின்ஆக்ரமிப்பு குண்டு வீச்சுக்களுக்கு நடுவேயும் தொழுகைக்காக துண்டுவிரிக்கிறஒரு சமுதாயம்சர்வதேச அளவில்கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில்அன்றாடம் அணுகுண்டுகளை வீசிக் கொண்டிருக்கிற ஊடகங்களை தாண்டிஉயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் முஹம்மது(ஸல்என்றபெயரை இன்னும் எத்தகைய உயிர்த்துடிப்போடு உச்சரித்துக்கொண்டிருக்கிறது என்பதை நியாயமாக யோசித்துப் பார்க்க வேண்டியதுஅறிவாளிகளின் கடமையாகும்.
 
இத்தகைய ஆகர்ஷணம் கொண்ட ஒரு சக்தி எத்தகைய சத்தியவெளிச்சத்திற்குரியது என்பதை அறிஞர்கள் அளவிட வேண்டும்.அற்பத்தனமாக் குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசுவதை விட்டுவிட்டு அவர்விசயத்தில் நியாயாமான ஒரு பரிசீலனைக்கு மக்கள் தயாராக வேண்டும்.
முஹம்மது நபியை களங்கப்படுத்தும் முயற்சியை அணு அளவிலும்விட்டுவைக்காத முஸ்லிம் சமுதாயம் அவரைப் பற்றிய கருத்துவிவாதங்களுக்கு எப்போதும் தயாராக இருக்கிறது.
 
அவரை தீவிரமாக எதிர்தவர்கள் அந்த சத்திய தரிசனத்தை நேரிட்டுக் கணடநிமிடச் சருக்கில் சரணாகதி அடைந்தனர் என்பதுதான் வரலாறுஉமர் ஒருஉதாரணம் போதாதாஒரு கவிஞன் சொன்னது போல் முஹம்மது(ஸல்)என்ற நன் மலரை வெட்ட வந்த விரல்களே அந்த மலருக்கு காம்பாகமாறிவிடவில்லையாஎதிர்ப்பு எங்கே வலுவாக இருக்கிறதோ அங்கேபலமான தளத்தை அமைத்துக் கொண்டது தான் முஹம்மது(ஸல்நபியின்தனிச்சிறப்பு.
 
முஹம்மது நபி (ஸல்தனது ஊர் மக்களிடம் “உங்களது உறவினன் நான்.அந்தக் காரணத்தினாலேனும் என் வழியில் செல்ல என்னை அன்மதியுங்கள்என்று கோரிய போது அதைக் கூட ஏற்க மறுத்தனர் அம்மக்கள்ஆயினும்முஹம்மது நபி (ஸ்ல்அவர்களது வாழ்வில் குற்றம் கண்டு பிடித்து அவரைதரம் தாழ்த்திட அவர்கள் முறசிக்கவில்லை.
 

No comments:

Post a Comment