Tuesday, January 10, 2012

கலவரம் ஏற்படுத்த பாகிஸ்தான் கொடியேற்றிய கயவர்கள்; கண்டுபிடித்த Blogger..!


ரு நிறுவனத்தில் Appreciation Letters-ஐ விட Warning Letters அதிகரித்து விட்டால், அது அந்த நிறுவனத்துக்கு நல்லதல்ல. அதேபோல, ஒரு சமூகத்தில் பரஸ்பர பாராட்டுக்களும், நன்றியறிதல்களும் குறைந்து கண்டனக் குரல்களே மிகுதியாயின் அது அமைதி குலைந்த சமூகமாகி விடும். எனவே, இங்கே சிலரை அவர்களின் நேரிய நற்செயல்களுக்காக நன்றியோடு பாராட்ட இருக்கிறோம்.
புத்தாண்டு தினத்தன்று கர்நாடகாவிலுள்ள பீஜப்பூர் மாவட்டம், சிந்தகி என்ற ஊரில் அரசு வட்டாட்சியார் அலுவலகம் உட்பட பல அலுவலகங்கள் உள்ள ஒரு வளாகத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருக்க... உடனே, அந்த ஊரில் பதட்டம்..!

பிஜேபி, ஸ்ரீ ராம் சேனா உட்பட்ட தடை செய்யப்படவேண்டிய அனைத்து RSS - சங்பரிவாரங்களின் ஆதரவோடு... கடைய(உ)டைப்பு, கட்டுப்பாடற்ற ஊர்வலம், விஷமக் கோஷம், வன்முறை முழக்கம், வெறியாட்டம், தீவைத்தல், வாகனங்களைச் சேதப்படுத்துதல், சாலை மறியல், தர்ணா, போக்குவரத்து நிறுத்தம், பள்ளி கல்லூரி கட்டாய விடுமுறை, அலுவலகம் மூடல், அப்பாவி மக்கள் அவதியுறல், மாமூல் வாழ்க்கை பாதிப்பு, கலவரம், லத்தி சார்ஜ், பந்த்... எல்லாமே ஜெகஜோதியாக அடுத்தடுத்து திட்டமிட்டபடி மக்கள் விரோத செயல்கள் அரங்கேறின. பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக வழக்கம் போலவே முஸ்லிம்கள் இவர்களால் 'சந்தேகிக்கப்பட்டு'(?) தூற்றப்பட்டனர். உடனே கொடி ஏற்றியவர்களை கைது செய்ய கலவரக்காரர்களால் காவல் துறையினரிடம் கோரப்பட்டது..!!!

பாகிஸ்தான் கொடியேற்றிய மதக்கலவரத்தைத் தூண்டிய ஸ்ரீராம் சேனாவின் கேடிகள்
பாகிஸ்தான் கொடியேற்றிய மதக்கலவரத்தைத் தூண்டிய ஸ்ரீராம் சேனாவின் கேடிகள்
ஆனால், கயவர்களை கண்டுபிடித்து... கைது செய்தவுடன், அவர்களிடம் பேச்சு மூச்சை காணவில்லை..! அதுவரை அப்படி குதித்தவர்கள் அடங்கிப்போய் ஓடி ஒளிந்து உட்கார்ந்து விட்டார்கள். அது மட்டுமல்ல, "நான் இல்லை நீதான்..." "...இல்லை ...இல்லை ...நீ தான்..!" "உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே..!" "நீ யார்..?" என்று நேற்றுவரை ஒன்றாக இருந்து கத்தியவர்கள்... தமக்குள் இன்று சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்..!

'இஸ்மாயில்' என்று கையில் பச்சை குத்தி காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே காலத்தில் இருந்தே... இப்படி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அப்பாவி மக்களிடம் ஹிந்துத்வா மதவெறியூட்டி... கொலைக்களம் காணத்துடிக்கும் ஈவிரக்கமற்ற இந்த பயங்கரவாதிகளுக்கு கண்டனப்பதிவு போடுவதை விட, இந்த உண்மையை மூன்றே நாளில் கண்டுபிடித்தோரைப் பாராட்டி பதிவு போடுவதே இப்போது மிக முக்கியம்..!


இதற்கு முன் இரண்டு பிளாஷ்பேக்ஸ் பார்த்து விடுவோம்..!


RSS உறுப்பினர்கள் குண்டு வைத்ததைக் கண்டு பிடித்த P. கண்ணப்பன்
RSS உறுப்பினர்கள் குண்டு வைத்ததைக் கண்டு பிடித்த P. கண்ணப்பன்
பிளாஷ்பேக் -1 : P.கண்ணப்பன்..!

தென்காசி RSS அலுவலக குண்டு வெடிப்பு தொடர்பாக உடனடியாக சந்தேகத்தின் பேரில், தலைப்புச் செய்தியில் "இஸ்லாமிய(?) பயங்கரவாதிகள்" கைது செய்யப் பட்டிருக்க, அந்த வழக்கைத் தன் கையில் எடுத்து... திறம்படத் துப்பறிந்து... "தங்கள் அலுவலகத்தில் தாங்களே வெடி குண்டு வைத்துக் கொண்டார்கள், இந்த RSS பயங்கரவாதிகள்" என்ற உண்மையை வெளிக்கொணர்ந்த அன்றைய திருநெல்வேலி DIG (பின்னர், மதுரையில் IG) P.கண்ணப்பன் IPS மற்றும் அவருடைய டீமை தமிழ் முஸ்லிம்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. "முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள்" என்ற புனையப்பட்ட அவப்பெயரை முதலில் நீக்கியவர். ஆனாலும், இந்திய ஊடகங்கள் இதை துணுக்குச் செய்தியாகக் கூட  பகிராமல் மறைத்தன.!

பிளாஷ்பேக் -2 : ஹேமந்த் கார்கரே..! 

காவி பயங்கரவாதத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த ஹேமந்த் கார்கரே
காவி பயங்கரவாதத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த ஹேமந்த் கார்கரே
இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு முஸ்லிமும் இவரை தெரியாமலோ, தெரிந்தோர் மறந்து போயிருக்கவோ வாய்ப்பே இல்லை..! நான் உட்பட இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தலை நிமிர்ந்து தனக்கான குடியுரிமையுடன் ஜம்பமாக பயங்கரவாதத்தை எதிர்த்து அவைகளுக்கு தடை கோரி பதிவில் எழுத- பொது வெளியில்  பேச- முடிகிறது என்றால்... பற்பல குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்கனவே "இஸ்லாமிய(?) பயங்கரவாதிகள்" சந்தேகத்தின் பேரில் தலைப்புச் செய்தியில் கைது செய்யப் பட்டிருந்தும், அனுதினமும் வந்த காவிகளின் கொலை மிரட்டல்களை பொருட் படுத்தாது அந்த வழக்குகளில் உண்மையை வெளிக் கொணர்ந்த இவரின் நேர்மையான உயிர்க்கு அஞ்சா உழைப்பே காரணம். இவரை நம் நாட்டிற்கு சரியான நேரத்தில் ஈந்த இறைவனுக்கே புகழனைத்தும்.

இவர்கள் போல இன்னும் நிறைய நேர்மையான அதிகாரிகளை நம் நாட்டிற்கு தரச்சொல்லி, இத்தளத்தில் முன்பொரு பதிவில் இறைவனிடம் நாம் பிரார்த்தித்து உள்ளோம். இவர்கள் போல கர்நாடகா பீஜப்பூர் சம்பவத்தில் இன்னும் சிலரை காண்கிறோம்.

இந்த பாகிஸ்தானிய கொடியேற்று சம்பவம் நடந்த நான்காவது நாள் அதிகாலை (வெறும் மூன்றே நாட்கள் தான் துப்பு துலக்கல்) "ஹிந்துத்துவ-RSS-சங்பரிவார கும்பலில் ஒன்றான 'ஸ்ரீ ராம் சேனா' வினர்தான் குற்றவாளிகள்" என்று கண்டு பிடிக்கப்பட்டது... நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சாதனை அல்லவா..?!

இதை நிகழ்த்தியவர்கள் பற்றி... இவர்களை ஃபோகஸ் பண்ணி  பாராட்டி, தட்டிக்கொடுத்து புகழ்ந்து பேச, ஃபோட்டோ போட்டு எழுத ஏனோ கிட்டத்தட்ட எவருமே முன்வர வில்லை..! அதனால் என்ன..? நாம் எதற்கு பிளாக் வைத்து இருக்கிறோம்..? தனிப்பதிவு போட்டு பாராட்டுவோம்..! போதாக்குறைக்கு  அவர் ஒரு பதிவர் (Blogger) வேறு..! விட்டு விடுவோமா..?
இரவில் மதவெறியுடன்... காலையில் முஸ்லிம்களை கண்டித்து....
இரவில் மதவெறியுடன்... காலையில் முஸ்லிம்களை கண்டித்து....
மங்களூர் பஃப் மற்றும் காதலர் தின தாக்குதலுக்கு பெயர்போன 'ஸ்ரீ ராம் சேனா'வின் மாணவர் அணி தலைவனான Rakesh Siddaramiah Mutt (19) என்பவனும், அவனோடு படிக்கும் அவ்வமைப்பின் கல்லூரி மாணவர்கள் Sunil Madiwalappa (18), Anil Kumar (18), Parashuram Ashok (20), Rohit Eshwar (18), Mallanagouda Vijaykumar (18) 5 பேரும் ( இதில் ஈடுபட்ட Arun Vaghmore (20) என்பவன் தப்பிவிட்டான்... தேடப்படும் இவன் மட்டும் இன்னும் பிடிபட வில்லை)....மொத்தம் ஏழு பேர் சேர்ந்து... இரவில் அங்கே கொடியை ஏற்றிவிட்டு காலையில் வந்து நல்லவர்கள் போல கொடியை ஏற்றியவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்யக்கோரி கோஷம்போட்டு பாகிஸ்தான் கொடியை எரித்து கலவரம் செய்து இருக்கின்றனர்..!

முதலில் அந்த ஜனவரி 1 இரவில் அந்த அலுவலக வளாகத்தில் இரவு அரைமணி நேரம் (3:30-4:00) ஒரு இருசக்கர மோட்டார் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததுதான் முதல் துப்பு. அதை கண்ட ஐ விட்னஸ் சொன்ன தகவலின்படி... அந்த வாகனத்துக்கு சொந்தக்காரனை, வேறொரு இடத்தில் பார்த்த அந்த ஐ விட்னஸ் அவனை அடையாளம் காட்ட...  அவனை அணுகி விசாரிக்கும் போது தெரியவந்தது என்னவெனில்... பைக் சொந்தக்காரனான இவனும் இவன் நண்பனும் பிஜப்பூரில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள் முடிந்து நள்ளிரவில் திரும்பும்போது தம் நண்பர்களை அந்த அரசு அலுவலக வளாகத்தில் சந்தித்ததாக தெரிவித்தனர். கூடவே அவர்கள் செய்த காரியமும் இவர்கள் மூலம் வெளிவந்து விட்டது. இவர்களின் மூலம் மற்ற நண்பர்கள் கண்டறிந்து சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டனர். தப்பிவிட்ட ஒருவன் மட்டும் இன்னும் சிக்கவில்லை. தாசில்தார் அலுவலகத்தில் ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி சுனில் வீட்டில் தான் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது..! புதன்கிழமை, ஜனவரி 4 ம் தேதி அதிகாலை மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பொதுவாக முஜாகிதீன், சிமி, தொய்பா, கொய்தா என்று அனானி ஈமெயிலை ஆதாரமாக குற்றம் சாட்டி சந்தேகத்தின் பேரில் 'தடா பொடா' என்று கைது செய்யப்படுபவர்கள் கூட, தங்கள் முகங்களை கைகளால் மறைக்க இயலாதவாறு பின்னால் கட்டப்பட்டு செய்தியாளர்களிடம் முகம் நிமிண்டி காட்டப்படுவது நாம் அறிந்ததே..! 
ஆனால், இங்கே... சாட்சி, ஆதாரத்துடன் அகப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னரும் கூட... இவர்களுக்கு முகத்தை மறைக்க பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட முகம் மறைக்கும் புருகா-நிகாப் சலுகைகள் எல்லாம் தரப்பட்டுள்ளன..! சபாஷ்..! இந்த "புதிய மாற்றத்தை" நாம் வரவேற்போம். அதேநேரம்... நாளை ஒருநாள்... 'குற்றவாளிகள்' என்று நீதிமன்றம் தீர்பளித்த பின்னராவது இவர்களின் முகத்தை "நடுநிலை(?) ஊடகங்கள்" நமக்கு காட்டுவார்கள் என்று நம்புவோம்..!

"ஒரு பக்கம், நாங்கள் குற்றவாளிகள் அல்ல... RSS தான் குற்றவாளி" என்று கூறும் ஸ்ரீ ராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் - கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூடவா இந்த உண்மையை கண்டுபிடித்த சாதனையாளர்களுக்கு இல்லை..? அவனுக்கெல்லாம் பக்கம் பக்கமாக அத்தனை ஃபோட்டோக்கள் கூகுளில் உள்ளன..! ஹேமந்த் கார்கரேவின் வாரிசுகளான இவர்களுக்கு ஒரே ஒரு போட்டோ எடுப்பதற்குள்...அப்பப்பா 2 நாளாக நான் பட்ட பாடு..! அவர்கள் ஒருவரல்ல சகோ..! 5 பேர் கொண்ட டீம்..! இந்த ஐந்து பேரில், அதன் டீம் தலைவர்தான் சாதனையாளரான நம் பதிவர்..! கடைசியில், அவரின் வலைப்பூ ப்ரோஃபைல் போட்டோ தான் எனக்கு கிடைத்தது..! நியூஸில் அல்ல..!
ஸ்ரீராம் சேனா பயங்கரவாதிகளை கண்டுபிடித்த பிஜப்ப்பூர் SP ராஜப்பா
ஸ்ரீராம் சேனா பயங்கரவாதிகளை கண்டுபிடித்த பிஜப்ப்பூர் SP ராஜப்பா
அவர்.... பீஜப்பூர் மாவட்ட SP,  Dr. D.C. ராஜப்பா IPS

(பிற்சேர்க்கை) மேலேயுள்ள  ப்ளாக் ப்ரோஃபைல் லிங்க் இதுதான்....
http://www.blogger.com/profile/09631126950354305286
(பிற்சேர்க்கை) இந்த ப்ரோஃபைலில் உள்ள அவரின் வலைப்பூ முகவரி இதுதான்....  http://bijapurpolicenews.blogspot.com/

இவர்தான் ஒரு  "special investigation team"  ஒன்றை தன்னுடைய DSP - முத்துராஜ் தலைமையில் உடனடியாக ஏற்படுத்தி... அதில் DCIB Police Inspector சித்தேஷ்வர், CPI சிதம்பர் மற்றும்  PSI பாபகவுடா படில் ஆகியோரை இணைத்தார். இவர்கள்தான் எவ்வித உயிரிழப்புகளும் இன்றி கலவரத்தையும் கட்டுப்படுத்தி, பந்தையும் அமைதியாக நடக்க அனுமதித்து, இதன் மூலம் முஸ்லிம்கள் மீது தேசத்துரோக பழிபோட்டு, அப்பாவி இந்து மக்களை தூண்டிவிட்டு பெரிய அளவில் மதக்கலவரத்தை கர்நாடகாவில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததை முறியடித்தும் உள்ளனர்.

நம் நாட்டில் இவரை/இவர் டீமை எவரும் கண்டு கொள்ளா விட்டாலும் கூட... தான் உண்டாக்கிய தன்  டீமுக்கு தானே ரூ.10,000 வெகுமதி வழங்கி கவுரவித்தும் உள்ளார்.

நம் சக பதிவரான... இவருக்கு நம் பாராட்டுக்களை மகிழ்வோடு தெரிவிப்போம்.

Well done, Bijappur  SP, Dr. D.C. RAJAPPA & team..!

அவர்  ஊடக பேட்டியில் சொன்னது.......

"Rakesh is the Sindhagi unit president of Sene's student wing and the other accused are its members. They are all students in various colleges of Sindhagi and Bijapur. Their aim was to create communal unrest and gain advantage for their campaign" Rajappa said.

Rajappa said: "The accused have confessed...They were planning to shift base to Goa for a few days by mid- January. They had stitched the Pakistani flag at an accomplice's house in Sindhagi. Investigations are on to find out if other Sene leaders are involved." He said the accused conspired for a week before hoisting the flag on the night of December 31.

They returned the following morning and staged their demonstration, pelting stones at a government- owned bus. "Their motive was clear: hoist the flag, create unrest and take mileage by protesting against the incident," Rajappa said.

Read more at: http://indiatoday.intoday.in/story/sri-ram-sene-activists-pakistani-flag/1/167409.html


Thanks to these news sources for references.....

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=126207 (Sindhagi Town Tense as Pak. Flag Hoisted)
http://mangaloretoday.com/mt/index.php?action=headlines&type=2572 (special investigation team)
http://indiatoday.intoday.in/story/sri-ram-sene-activists-pakistani-flag/1/167409.html
http://www.megamedianews.in/index.php/44924/gang-of-7-in-rama-sene-hoisted-the-pak-flag-6-arrested-one-absconds/

அப்புறம் ஒரு கேள்வி..!
இந்த சம்பவம் பற்றிய செய்திகளை ஜனவரி 2 மற்றும் 3 ம் தேதிகளில் நிறைய தமிழ் & ஆங்கில தளங்களில் நான் படித்த போது அங்கேயெல்லாம் தவறாமல்  நான் பார்த்த சில பின்னூட்டங்களின் கருத்து என்னவென்றால்... "பாகிஸ்தான் கொடியை நம் நாட்டில் ஏற்றிய இந்த தேசத்துரோத முஸ்லிம் '@$*#~^+}?!(%='களை உடனே பிடித்து பாகிஸ்தானுக்கு பார்சல் கட்டி பார்டருக்கு அந்தப்புறம் தூக்கி வீசிவிடவேண்டும்" என்பதுதான்..! 

ஆனால்,  இந்திய முஸ்லிம்களை  பாகிஸ்தானுக்கு விரட்டும் தீயோரின் சூழ்ச்சியில் மீண்டும் மீண்டும் மண்..! போகாதோரை கலவரம் ஆரம்பித்து இனச்சுத்திகரிப்பு செய்யும் பயங்கரவாத சூழ்ச்சியும் செத்தது..!  அல்ஹம்துலில்லாஹ்..!
சரியான ஆதாரம், நிஜமான சாட்சி என்று ஏதும் இல்லாவிட்டாலும் ஊடகம் ஏற்படுத்திவிட்ட மாயையினால் 'பயங்கரவாதி' என்று மக்கள் மனதில் நன்கு பதியப்பட்டுவிட்ட அப்சல் குருவுக்கு... பெருவாரியான இந்திய மக்கள் ஆசைக்கிணங்க தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது போல..... இந்திய மக்களான அந்த பெருவாரியான பின்னூட்டவாதிகளின் ஆசைக்கிணங்க... இந்த பச்சைக் கொடியேற்றிய காவிகள் ஏழு பேரையும் உடனே பார்ஸல் கட்டி இந்திய-பாகிஸ்தான் எல்லையோர இரும்பு முள் வேலிக்கு அந்தப்பக்கம் நைசாக ராவோடு ராவா தூக்கி கடாசி விட வேண்டும்..!

இவர்கள் மீது, இப்படி ஒரு நீதி மன்ற தீர்ப்பு வந்தால் எனக்கு ஓகே..!  உங்களுக்கும் ஓகே தானே?

No comments:

Post a Comment